ஜி20 க்கு இந்தியா செல்ல மறுக்கும் சீன அதிபர்: ஜோ பைடன் உறுதிமொழி !!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 9ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில்சீனா உட்பட 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்ப இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் சீன அதிபர் ஜின்பிங் தவிர்க்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நிருபர்கள் கேட்டபோது பதிலளித்த பைடன், ஏமாற்றமளிக்கிறது. ஆனால், நான் அவரை சந்திக்க போகிறேன் என கூறியுள்ளார்.
அண்மைய காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் பதற்றநிலை அதிகரித்து காணப்படுகிறது.
தைவான் விவகாரம், உளவு பலூன் விவகாரம் உள்ளிட்டவை எதிரொலித்த நிலையில், ஏற்றுமதி பொருட்களுக்கான பைடன் அரசின் தடை, கியூபாவில் இருந்து சீனாவின் கண்காணிப்பு வேலை உள்ளிட்டவற்றால் இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்தது.
எனினும், சமீபத்திய மாதங்களில் பைடன் அரசிலுள்ள அதிகாரிகள் அதிகளவில் சீனாவுக்கு சென்று, உறவை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்வார் என பைடன் நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.