ஆந்திராவில் அதிசயம்: 6 கிளைகளுடன் தென்னை, 5 கிளைகளுடன் பனை மரங்கள்!!
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், உன்ராயுடு பேட்டையை சேர்ந்தவர் கத்தரி சீனிவாசராவ். இவர் அதே பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் மற்ற மரங்களைப் போல் வளர்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரத்தில் மற்றொரு கிளை உருவானது. நாளாக நாளாக மேலும் 4 கிளைகள் வந்தன. சாதாரணமாக தென்னை மரங்கள் ஒரே கிளையுடன் வளர்வது வழக்கம்.
அதிசயமாக ஒரு சில இடங்களில் 2 கிளைகளுடன் தென்னை மரங்களை காணலாம். ஆனால் அதிசயமாக இந்த மரத்தில் 6 கிளைகள் ஏற்பட்டது. இதேபோல் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள குளக்கரையில் பனை மரம் ஒன்று 5 கிளைகளுடன் உள்ளது. ஒரே ஊரில் 6 கிளைகளுடன் தென்னை மரமும், 5 கிளைகளுடன் பனை மரமும் உள்ளது. இதனை அக்கம்பக்கம் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.