நேட்டோ உறுப்பு நாடான ருமேனியா எல்லையில் டிரோன் தாக்குதல்- ரஷியா மீது உக்ரைன் குற்றச்சாட்டு!!
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே உக்ரைனின் டான்யூப் ஆற்றில் உள்ள துறைமுகம் மீது நள்ளிரவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ரஷியாவின் டிரோன்கள் ருமோனியா நாட்டு எல்லைக்குள் விழுந்து வெடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, “ருமேனியா பகுதியில் ரஷியாவில் டிரோன்கள் விழுந்து வெடித்துள்ளது. ருமேனியாவின் குறுக்கே உள் டான்யூப் நதியில் அமைந்து உள்ள துறைமுகம் அருகே ரஷியாவின் தாக்குதலின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு ஆதாரமாக புகைப்படங்கள் எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ஆனால் இதை ருமேனியா மறுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, “ரஷிய டிரோன்கள் ருமேனியாவின் பிரதேசத்தில் விழுந்திருக்கக் கூடும் என்ற தகவலை திட்டவட்டமாக மறுக்கிறோம். ருமேனியாவில் எந்த நேரத்திலும் ரஷியாவின் தாக்குதல் வழிமுறைகள் நேரடி ராணுவ அச்சுறுத்தல்களை உருவாக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான ருமேனியாவில் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க மற்ற உறுப்பு நாடுகள் களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.