அவசர திட்டங்களுக்கு 3.9 மில். அமெ. டொலர் !!
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அடையாளம் காணப்பட்ட வீதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக 3.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு வங்கி இணங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
எஞ்சியுள்ள வீதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி மேற்குறிப்பிட்ட தொகையை வழங்க இணங்கியுள்ளது.
எவ்வாறாயினும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிலுவையில் உள்ள காரணத்தால் இந்த உதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தன்னால் முடிக்கப்பட வேண்டிய அவசரத் திட்டங்களைக் கண்டறிந்து, இந்த ஆண்டுக்குள் 3.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளாகவும் அவர் குறிப்பிட்டார்.