சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்!!
“செனல்-04 வெளியிட்ட செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை” என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செனல்-04 வெளியிட்ட செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர், இன்று (06) முறையிடவுள்ளார்.
இன்று (06) மாலை வேளையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று அவர் முறைப்பாடு செய்யவுள்ளார் என்று அறியமுடிகின்றது.