;
Athirady Tamil News

ஜி20 மாநாட்டு அரங்கத்தின் முகப்பில் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை- பிரதமர் மோடி டுவீட்!!

0

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள தேவசேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான ராதாகிருஷ்ணன், ஸ்ரீகண்டன், சுவாமிநாதன் ஆகியோர் நடராஜர் சிலையை வடிவமைக்கும் பணியை தொடங்கினர்.

75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் சிலை இந்திரா காந்தி தேசிய கலை மைய தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையில், மைய அலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து சிலை டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்டது. மீதமுள்ள பணிகளும் நிறைவடைந்த நிலையில் உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையை ஜி20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ளது. 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடை கொண்ட இந்த சிலை ரூ.10 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடராஜர் சிலை நிறுவியது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.