நொடிப்பொழுதில் கடலுக்குள் காரை இழுத்துச் சென்ற சூறாவளி!!
கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பாரியளவில் பாதிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் பெலியான் நகரில் ஏஜியோஸ் லோவன்னிஸ் பகுதியில், கார் ஒன்று சூறாவளி காற்றால் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
இதேவேளை கடந்த திங்கட்கிழமையில் இருந்து டேனியல் என்ற சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் நிலச்சரிவு ஏற்பட்டது. பாலம் இடிந்து விழுந்ததுடன் மின் கம்பங்களும் சாய்ந்தன. 20-க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள், வீதிகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த சூழலில், சூறாவளி பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேரை காணவில்லை.