டெல்லியில் மத்திய மந்திரி வீட்டின் முன் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.!!
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஏற்கனவே பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களுக்கு சம்பளத் தொகை வழங்காமல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. 6,366 கோடி ரூபாய் 18 மாநிலங்களுக்க வழங்காமல் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே கடந்த மாதம் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைப் பார்த்தவர்களுக்கு சம்பளம் மறுக்கப்படுவதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் வீட்டிற்கு வெளிப்புறம், ஜந்தர் மந்தர் மற்றும் கிரிஷி பவன் ஆகிய மூன்று இடங்களில் அக்டோபர் 2-ந்தேதி மற்றும் 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் திரணாமுல் காங்கிரஸ் கட்சி பேராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என, மேற்கு வங்காள எம்.பி.யும், திரிணாமுல் கட்சியை சேர்ந்தவருமான தெரிக் ஓ’பிரைன் டெல்லி போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே கடந்த மாதம் 31-ந்தேதி கடிதம் எழுதியுள்ள நிலையில், காவல்துறை பதில் அளிக்காத நிலையில், தற்போது மீண்டும் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.