சர்ச்சைக்குரிய கதிரியக்க ஆயுதங்கள் உக்ரைனுக்கு !!
சர்ச்சைக்குரிய கதிரியக்க ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கான ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியின் கீழ் இந்த ஆயுதங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீயேவ்விற்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கன், புதிய இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதன்கீழ் கதிரியக்க தீவிரம் குறைக்கப்பட்ட யுரெனியம் வெடிமருந்துகளை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிமருந்துகள் அமெரிக்க தயாரிப்பான ஆப்ராம்ஸ் தாங்கிகளில் பயன்படுத்தப்படுத்தக் கூடிய ஒன்றென குறிப்பிடப்பட்டுள்ளது.
யுரேனிய வெடிமருந்துகளை வழங்கும் அமெரிக்க நிர்வாகத்தின் தீர்மானம், மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை என ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.
தெளிவாக மூலோபாய தோல்வியை ஏற்படுத்தும் நோக்குடன் இறுதி உக்ரைனியர்களை மாத்திரமல்லாமல், முழுமையான தலைமுறையையும் அழிக்க அமெரிக்கா தயாராகின்றது என வொஷிங்டனில் உள்ள ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கண்மூடித்தனமான விளைவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் யுரேனிய வெடிமருந்துகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்குகின்றது எனவும் ரஷ்யத் தூதரகம் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.