ஜி-20 மாநாடு: 500 வகை உணவுகளுடன் பிரமாண்ட ஏற்பாடு!!!
* ஜி-20 உச்சி மாநாட்டுக்காக டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
* டெல்லி நகரம் முழுக்க சாலை சந்திப்புகள், சாலையோர கட்டிடங்கள் அனைத்தும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. * வெளிநாட்டு தலைவர்கள் பயணத்துக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக டெல்லி மக்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. * டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் டாக்சி, ஆட்டோ ஆகியவை இயங்க கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. * பாதுகாப்புக்காக 2 லட்சம் பேர் கொண்ட பாதுகாப்பு படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
* வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களுக்காக 500 வகை உணவுகள் தயாராகி வருகின்றன. அந்த உணவுகள் தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் வினியோகம் செய்யப்படும். * டெல்லியில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. * வெளிநாட்டு தலைவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு 17 மத்திய மந்திரிகளிடம் பிரித்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. * ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. * குற்றத்தை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. * வெளிநாட்டு தலைவர்கள் வந்து செல்லும் பகுதிகளில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.