அம்பிகா சற்குணநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் துணை ஆயுதக் குழுக்கள் குறித்து ஏன் இதுவரை பேசவில்லை – அருண் சித்தார்த் கேள்வி!!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் துணை ஆயுதக் குழுக்கள் குறித்து ஏன் இதுவரை பேசவில்லை என யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனல் 4 வில் வெளியான காணொளி தொடர்பில் பார்க்கும் போது வாக்குமூலம் அளித்தவர்களின் நம்பகத்தன்மையை பார்க்க வேண்டி இருக்கிறது, அசாத் மௌலானா, அம்பிகா சற்குணனாதன் மற்றும் நிஷாந்த்த சில்வா போன்றவர்கள்.
அம்பிகா சற்குணனாதனை பொருத்தவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தலைவராக செயற்பட்டவர் அவர் இன்றுவரை இந்த ஆவணப்படத்தில் பிள்ளையான் ஒரு துணை ஆயுதப்படையாக செயற்பட்டதாக சொல்லுகின்றார். நாங்கள் அம்பிகா சற்குணனாதனின் வாக்குமூலத்தில் நம்பகத்தன்மை எமக்கு கிடையாது, அவர் இதுவரைக்கும் தான் சார்ந்து இயங்குகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற முன்னாள் துணை ஆயுதக் குழுக்கள் குறித்து பேசியதே இல்லை,
அம்பிகா சற்குணனாதன் கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சுமந்திரன் மூலம் தேசியப்பட்டியலுக்கு பிரேரிக்கப்பட்ட ஒருவர் இவர் கூட்டமைப்பு சார்ந்து இயங்குபவர், தான் சார்ந்து இயங்கும் கட்சியில் இருக்கின்றனர் முன்னாள் துணை ஆயுதக்குழுக்கள். இவர்கள் எல்லோருமே முன்னாள் இன்னாள் துணை ஆயுதக் குழுவாக செயற்பட்டவர்கள், இவர்கள் எவருடைய கையிலும் இரத்தக் கறை இல்லாதவர்கள் கிடையாது.
அரசாங்கத்தின் பாதுகாப்பில் 2009 ம் ஆண்டு யுத்தம் முடியும்வரை சித்தார்த்தன் தலைமையில் இருந்த இயக்கம் முழுமையான ஒரு துணை ஆயுதக் குழுவாக இயங்கியது, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றவர்கள் இந்தியாவின் துணை ஆயுதப் படையாக இயங்கியவர்கள். இவர்கள் சார்ந்த முகாமில் இருக்கும் அம்பிகா சற்குணனாதன் இன்றுவரைக்கும் இந்த துணை ஆயுதப்படை குறித்து பேசியது இல்லை,
தாங்கள் சார்ந்த முகாமுக்கு எதிரான அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதும், தான் சார்ந்து இயங்குகின்ற தமது முகாமுக்குள் நடக்கின்ற தவறுகளை மறைப்பதும் இவர்கள் பல்லாண்டு காலமாக செய்த பித்தலாட்டம்.
இந்த முறை ஐநா சபையில் பொறுப்புக்கூறல்தான் பிரதானமான விடையமாக இருக்கின்றது, அவ்வாறு இருக்கும் போது இவர்கள் சார்ந்து இயங்கிய இயங்குகின்ற கட்சிகளுக்குள் இருக்கின்ற துணை ஆயுதப் படையின் குற்றங்கள் குறித்து இவர்கள் பேசவில்லை,
இன்று இந்த ஈஸ்டர் தாக்குதலை போன்று இந்த துணை ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு அழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எந்தவிதமான நீதியும் கிடைக்காமல் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக ஆவணப்படத்தினுடைய நம்பகத்தன்மை குறித்து பாரிய கேள்வி எழுகின்றது,
நாம் இங்கு யாரையும் பாதுகாப்பதற்கா பேசவில்லை சனல் 4 எந்த நிகழ்ச்சி நிரலில் என்ன காரணத்திற்காக இயங்குகின்றது என்பது குறித்து நாங்கள் ஆராயவில்லை, அவர்கள் வெளியிட்ட காணொளியின் நம்பகத்தன்மை குறித்துத்தான் நாங்கள் பேசுகின்றோம். அவர்கள் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் பாரிய மனித உரிமை மீறல், பல நூற்றுக் கணக்கான உயிர்கள் சம்பந்தப்பட்ட விடையம் இவை குறித்து நீதியான, சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இந்த சம்பவள்கள் மட்டும் இல்லை இது போன்ற பல சம்பவங்கள் இந்த நாட்டில் இடம்பெற்று இருக்கின்றது இந்த துணை ஆயுதக் குழுக்கலால் பல்வேறு சாதாரண மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் அவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது கருத்து என தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!