அமைதிப் பேச்சுவார்த்தைக்காக கட்டார் பயணமான சூடான் இராணுவ தளபதி !!
சூடானில் இராணுவப் படைகளுக்கிடையே நிகழும் மோதலினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, சூடானின் இராணுவத் தளபதி கட்டார் பயணமாகியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இராணுவத்தளபதி அப்துல் ஃபட்டா அல்-புா்ஹான் நேற்றைய தினம் (07) கட்டார் பயணமாகியுள்ளார்.
மோதல் ஆரம்பமாகி 05 மாதங்களில் அவர் பயணம் மேற்கொண்ட மூன்றாவது சா்வதேசப் பயணமாக இது உள்ளது என்று தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
வட ஆபிரிக்க நாடான சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் (RSF) துணை இராணுவப் படைக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்த மோதலிற்கு அதிகாரப்போட்டியே காரணம் என்றும் கூறப்படுகிறது, இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சண்டை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த மோதலின் காரணமாக, இதுவரையில் 4,000 தொடக்கம் 10,000 போ் வரையில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த மோதலினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.