140 ஆண்டுகளின் பின் ஹொங்கொங்கில் கன மழை !!
சீனாவின் ஹொங்கொங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஒரே நாளில் சுமார் 200 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எல்லா இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இது மிகப்பெரிய சேதங்களை விளைவித்திருப்பது மாத்திரமல்லாமல் சுமார் 140 ஆண்டுகளின் பின்னர் ஹொன்கொங்கில் இவ்வாறு கனத்த மழை பெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பலத்த மழையின் காரணமாக ஹொங்கோங்கின் புகையிரத சேவையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. புகையிரத நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புகையிரத சேவை மாத்திரமல்லாது சாதாரண போக்குவரத்து சேவைகளும் கூட வெள்ளம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாடசாலைகள், வணிக வளாகங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளது, இதனால் வீடுகளில் இருந்த படியே பணிகளை நிறைவேற்றும் படி அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவை தவிர, வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததிருப்பதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நிலைமை மோசமாக இருப்பதனால் நிலைமை சீராகும் வரை அனைவரையும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் படியும், வீட்டை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் எனவும் அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.