ஜி20 சிறப்பு விருந்து – விருந்தினர்களை வரவேற்கும் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி!!
ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து வரவேற்கின்றனர். விருந்தில் கலந்து கொள்ள உலக தலைவர்களை தவிர இந்திய மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
சிறப்பு விருந்தின் அங்கமாக 50 முதல் 60 இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விருந்தினர்களுக்கு இசை கலைஞர்கள் இந்திய இசையை விருந்தாக்கவுள்ளனர். விருந்தினர்களுக்கு சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் மும்பையில் பிரபலமான பாவ் என ஏராளமான உணவு வகைகள் தயாராகி இருக்கிறது.