சிலருக்கு வியாதி அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்காவிட்டால் வியர்வையும் வெளியேறாது!! (முகநூலில் இருந்து)
சிலருக்கு வியாதி அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்காவிட்டால் வியர்வையும் வெளியேறாது
பொழுது போக்குக்கேனும் பொரிஞ்சு தள்ள வேணும்
தனியார் துறை தனித்துவம் என்று தட்டிக்கொடுக்க வேணும்
தவறேதும் இல்லை ஆனால் தனிமைப்படுத்தி தாக்குவது கூட ஒரு அசாதாரண உளநிலை தான்.
போட்டிப் பரீட்சை பொய் சொல்லி வளர்க்காத கல்வித்தகைமை
திறன் மதிப்பீடு இத்தனையும் கடந்து
உத்தியோகம் எடுத்தவனை
ஒட்டுமொத்தமாய் ஒருவன் வந்து
கடவுள் மாதிரி கதை சொல்லுவான்
அரச துறை சரியில்லை.
காப்போத்தல் கிடைச்சா வாக்கை அரசியல் வாதிக்கு வாக்கை மாத்திப்போடுபவனும்
மணலுக்கும் மரத்திற்கும்
பிஸ்னஸ் பண்ண லஞ்சம் கொடுப்பவனும் தனக்கு பிடிச்சவனுக்கு
வாக்கை போட்டுட்டு அரசுத்துறை மெத்த மோசம் என்று மொத்தமாய் சொல்லுவான்.
பிரதேச செயலகம் போய் அடையாள அட்டையை மறந்திட்டு வந்திட்டேன்
அடையாளத்தை உறுதிப்படுத்த கேட்பவனும்
காணிக் கந்தோர் போய் தாத்தா செத்துப் போட்டார் மொத்த சொத்தும் எழுதி தா
பார்த்து உனக்கு பச்சை தாள் மஞ்சள் தாள்
பாராமுகமாக நான் தாறேன்
என்கிறவன்
தன் பொறுப்பு தன் வகைசொல்லல் மறந்து
அரச துறை வறுமை என்பான்.
அரசியல் வாதி ஒருபுறம் அப்பாவி மக்கள் என்று அந்நியனாய் மாறும் மக்கள் மறுபுறம்
இத்தனைக்கும் இடமாற்றம் இன்னொருபுறம்
மட்டுப்படுத்தப்பட்ட சம்பளம் மாறி மாறி வரும் சுற்றுநிருபங்களையும் உள் வாங்க வேணும்
உழைத்த உழைப்புக்கு பாராட்டு எதுவும் இல்லை இலாபம் கிடைச்சா வெள்ளைச் சட்டை காரர் கைப்பைக்குள் போக மீதமாய் இருக்கும் சம்பளத்தை எடுத்து வீடு திரும்பும் அவனை விமர்சிப்பது கூட ஒரு மனநோயின் வெளிப்பாடு தானே.
தவறுகள் இல்லா உலகம் இருந்தால் சொல்லுங்கள் தனித்தீவு அமைத்து விடலாம்.
பிரச்சினை அரச துறை தனியார் துறை என்றதில்லை தனிமனித தவறுகள் எல்லா இடத்திலும் நடந்திட்டு தான் இருக்கிறது மாட்டாத வரை எல்லாரும் புனிதர்கள் இதற்கு மீடியாக்களும் உள்ளடங்கும். இது பொருத்தமானவர்களுக்கு…
தனியார்துறை அரசியல் வாதிகளோடை சேர்ந்து நாட்டை சுரண்டினதுக்கும் சேர்த்து தான் அரச உத்தியோகத்தர்கள் உழைக்க வேண்டி இருக்கிறது. மட்டுப்பாடன மனித வளத்துடன் அரச இயந்திரம் இயங்குவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தனியார் துறையாயின் சேவையை அல்லது இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தலாம். இங்கு சமூக நலன்புரி அரசை அங்கீகரித்து வாக்குப்போட்டு விட்டு அரச உத்தியோகத்தர்களை குறை கூற முடியாது. மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியுடன் அரச இயந்திரம் அனைத்து விடயங்களையும் கவனிக்க வேண்டும் அல்லது சேவை முழுமை பேண வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் உள்ளது. அதிகமான தவறுகளை ஆராய்ந்து பார்த்தால் சுயபரிசோதனை அற்ற சமூகமும் மிக பிரதானம்…