பெயரை மாற்றிய முக்கிய நாடுகள் எவையென்று தெரியுமா..!
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகின்றது.
இந்நிலையில், உலகில் இதுவரை பல நாடுகள் தங்களது பெயர் மாற்றங்களை பதிவு செய்துள்ளது.
எந்த நாடுகள் தங்களின் பெயர்களை மாற்றியுள்ளது என்பதனையும் அதற்கான காரணத்தைரயும் இங்கு விரிவாக காணலாம்.
துருக்கி
துருக்கி நாட்டின் பெயர் துருக்கியே என மாற்றப்பட்டுள்ளதாக 2022 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் (Tayyip erdogan) தெரிவித்துள்ளார்.
புதிய பெயர் நாட்டின் பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தை உள்ளடக்கியது என விளக்கமளித்துள்ளார்.
நெதர்லாந்து
ஹாலந்து என்று அழைக்கப்பட்ட நாடு, தனது சர்வதேச ஆளுமையை புதுப்பிக்க விரும்பி, நெதர்லாந்து என பெயர் மாற்றத்தை பரிந்துரைத்தது.
இந்த மாற்றமானது, நாட்டின் புதுமை மற்றும் வெளிப்படைத்தன்மையை முன்னிலைப்படுத்த அரங்கேறியது.
இலங்கை
கலாச்சார அடையாளத்தை உணர்த்தவும், போர்த்துகீசிய மற்றும் பிரித்தானிய கால மரபுகளில் இருந்து விலக்கி கொள்ளவும் சிலோன் என்பதிலிருந்து இலங்கை என பெயர் மாற்றம் பெற்றது.
சிலோன் என்ற பெயர் 2011 ஆம் ஆண்டுக்கு பின் முற்றிலுமாக நீக்கப்பட்டது.
செக்கியா
செக் குடியரசு நாடு 2016 இல் செக்கியா என்று பெயர் மாற்றம் செய்தது. இந்த மாற்றமானது நாட்டின் பெயரை எளிமையாக்கும் நோக்கில் அரங்கேறியது.
இதனால், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மார்க்கெட்டிங் செயல்பாடுகளில் எளிதாக அடையாளம் காணமுடிந்தது.
ஈரான்
ஈரான் நாடு 1935 ஆம் ஆண்டு வரை பெர்சியா என்று அழைக்கப்பட்டு வந்தது.
தேசத்தின் புதிய தொடக்கத்தை குறிக்கும் வகையில் பெயர் மாற்றத்தை மன்னர் ரேசா ஷா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மியன்மார்
மியன்மார் 1989 ஆம் ஆண்டு வரை பர்மா என அழைக்கப்பட்டு வந்தது.
பர்மா என்பது நாட்டின் முன்னணி இனக்குழுவான பர்மன்களுடன் தொடர்புடைய பெயர் ஆகும்.
எஸ்வதினி
ஸ்வாசிலாந்து இராஜ்ஜியம் (Swaziland) என அழைக்கப்பட்டு வந்த நாடு, 2018 ஆம் ஆண்டில், கிங் மெஸ்வட் 3 அரசரின் ஆணைப்படி, எஸ்வதினி(Eswatini) இராஜ்ஜியமாக மறுபெயரிட்டு கொண்டது.