சூடானில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் : அண்டை நாடுகளில் தஞ்சம் புகும் மக்கள் !!
சூடானில் நிலவிவரும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக 78 ஆயிரதிற்கும் அதிகமானோர் எத்தியோப்பியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஐ.நா வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.
ஆபிரிக்க நாடான சூடானில் அந்த நாட்டு இராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படையினருக்கும் இடையே ஆட்சியை பிடிப்பதற்காக கலவரம் நிகழ்ந்து வருகிறது.
பதற்றமான சூழல்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான உள்நாட்டு போரானது இன்னும் நீடித்தவண்ணமே உள்ளது.
இந்த போரின் காரணமாக இதுவரையில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு பலியாகி உள்ள நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பலதரப்பில் இருந்தும் எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதனால் அங்கு பதற்றமான சூழல் தொடர்ந்து கொண்டிருப்பது மக்களுக்கு அச்சத்தை அதிகரிக்கின்றது.
இதன் காரணமாக ஏராளமானோர் பாதுகாப்பு கருதி அண்டை நாடுகளுக்கு அகதிகளவாக குடிபெயர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை சூடானில் இருந்து 78,598 பேர் எத்தியோப்பியாவுக்கு குடிபெயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எத்தியோப்பியாவுக்கு குடிபெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 46 சதவீதம் என கூறப்படுகிறது.