பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் டாலர் உதவி: ரிஷி சுனக் அறிவிப்பு!!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
ஒரே தவணையில் அளிக்கும் இந்த நிதி, பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, பசுமை பருவநிலை நிதிக்கு (GCF) சென்றடையும். இந்த நிதி அமைப்பு 194 நாடுகளுடன் உருவாக்கப்பட்டது. இந்த தகவலை இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ளது.