தங்க முட்டை கண்டுப்பிடிப்பு!!
அலெஸ்கா விரிகுடாவின் கடலின் அடிப்பகுதியில் சுமார் 3,300 அடி ஆழத்தில் ‘தங்க முட்டை’ என சந்தேகிக்கப்படும் ஒரு மர்மப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மர்ம பொருள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை மற்றும் இந்த ‘முட்டை’ அமெரிக்க கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பொருள் உண்மையில் முட்டையாக இருந்தால், இதுவரை கடலின் அடிவாரத்தில் கண்டுபிடிக்கப்படாத உயிரினத்தின் முட்டையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மர்ம பொருளின் அகலம் 10 சென்டி மீட்டர் உயிரியல் தோற்றம் கொண்டதாக இருக்கலாம் என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.
முட்டை வடிவிலான இந்த பொருள் வெடித்து சிதறி அதில் இருந்து ஏதாவது உயிரினம் வெளிவந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது இது எந்த விலங்கின் முட்டை என்பதை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.