சந்திரபாபு நாயுடு வழக்கின் தீர்ப்பு எதிரொலி – விஜயவாடாவில் பதற்றமான சூழல்!!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு வழக்கில் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட உள்ள நிலையில் விஜயவாடாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அங்கு அதிகளவில் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர். தீர்ப்புக்காக காத்திருக்கும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.