புடினுக்காக முன்வந்த பிரேசில் அதிபர்: G20 மாநாட்டில் உறுதி !!
அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டால் அவரது பாதுகாப்பை உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரேசில் அதிபர் லுலா த சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள G20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரேசில் அதிபர், அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது, அந்த ஆபத்து காரணமாக, ஜி 20 உச்சி மாநாடு உட்பட பல உச்சி மாநாடுகளில் பங்கேற்பதை புடின் தவிர்த்து வருகிறார்.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள G20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் பங்குபற்றினால், அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், பிரேசில் அதிபர் என்ற வகையில் அவர் தனது நாட்டில் கைது செய்யப்பட மாட்டார் எனவும் லுலா த சில்வா தெரிவித்துள்ளார்.