;
Athirady Tamil News

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள்!! (மருத்துவம்)

0

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலேயே ஆகும்.

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். கருவுற்றிருக்கும் தாய் மது அருந்தினால் அது குறைப்பிரசவம், குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தவல், பிறப்புச் சிதைவு மற்றும் உடல் எடைக் குறைவான குழந்தை எனப் பல வகைகளிலும் வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்கும்.

கர்ப்பிணி பெண்கள் அரைநிலையில் வேக வைக்கப்பட்ட அல்லது பச்சை முட்டையை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிற்று போக்கு, வாந்தி பிரச்சனை, தலைவலி, அடிவயிற்றில் வலி ஏற்படுதல், வெப்ப நிலை உயர்தல் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படக்கூடும்.

முதல் மூன்று மாதங்களுக்கு காபி, தேநீர் உள்ளிட்ட பானங்களைத் தவிர்த்தல் நல்லது. அத்தோடு செயற்கை இனிப்பூட்டிகள் நிறைந்த உணவுளையும் தவிர்க்க வேண்டும்.

கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் அல்லது அதுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சமைக்காத கடல் உணவுகள், கோழி உணவு வகைகள் முற்றிலுமாக கருவுற்றிருக்கும் காலத்தில் தவிர்க்க வேண்டும்.

பச்சை பாலை கர்ப்பிணிகள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பச்சை பாலில் மிகவும் தீங்குவிளைவிக்கக்கூடிய மூன்று வகையான பற்றீரியாக்கள் இருக்கிறது. அவை சால்மோனெல்லா, லிஸ்டேரியா. இ-கோலி, மற்றும் கிரிப்டோஸ்போரிடியம் ஆகும்.

கர்ப்பிணிகள் எப்போதும் இயற்கையான உணவை உட்கொள்வதே நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெமிக்கல் சேர்க்கப்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. எனவே, இதனால் பல வித பிரச்சனையை கர்ப்பிணிகளுக்குத் தரவும் கூடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.