;
Athirady Tamil News

37வது நாளாக தொடரும் போராட்டம்; இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? (PHOTOS)

0

நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையிலான கலந்துரையாடல்

24.08.2023 அன்று மாலை 4.30 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் காற்றாலை பிரச்சனைகள் தொடர்பாக 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனியின் மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், மாதர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனியின் முகாமையாளர், பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த காற்றாலை மின் உற்றத்தி செயற்பாட்டில் இரண்டு காற்றாலைகள் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ளபடியினால் அதன் மூலம் எழுகின்ற ஒலிகளினால் தங்கள் இயல்புநிலை பாதிப்படைந்துள்ளதாகவும் மன உளைச்சலுக்கு உள்ளகியுள்ளதாகவும் எதிர்காலத்தின் ஏற்படவுள்ள செவித்திறன் பாதிப்புக்கள் மற்றும் ஏனைய பாதிப்புக்கள் குறித்தது அச்சப்படுவதாக மக்கள் தெருவித்தனர். குறித்த HIRURAS POWER PVT.LTD காற்றாலை கம்பனியின் பணியாளர் சத்தம் ஒலி இவ்வாறு ஏற்படும் என தங்களுக்கு முன்னர் தெரியாது எனவும் இதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது. மக்கள் சார்பில் இரவில் 8மணிதொடக்கம் காலை 8 மணிவரை குறித்த இரண்டு காற்றாலைகளை நிறுத்திவைக்கும் படியும் அல்லது இரண்டு காற்றாடிகளையும் முற்றாக நிறுத்திவைக்கும் படி மக்கள் கேட்டனர். நானாட்டான் பிரதேச செயலாளர் அவர்கள் கூறும் போது மக்கள் கோரிக்கை நியாயமாகவுள்ளபடியினால் 1 மாத காலத்துக்குள் இதனை சரிசெய்யுமாறும் அல்லது நிறுத்திவைக்கும் படி பிரதேச செயலாளரினால் குறித்த 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனிக்கு மக்கள் ஒப்புதலுடன் கோரப்பட்டது. 11.09.2023 இன்றுடன் 18 நாட்கள் கடந்துள்ள நிலையில் தங்களுக்கான தீர்வினை எதிர்பார்த்து காத்திருக்கும் நறுவிலிக்குள மக்கள்

மன்னார் மாவட்ட சிவில் சமூகம் மற்றும் புத்திஜீவிகளின் வகிபாகம்

மாவட்டத்தின் அபிவிருத்தியில் மிக பாரிய பொறுப்பினை சிவில் சமூகத்தினர் கொண்டுள்ளனர். அரசியல் உயர்வர்க்கத்தினால் நடைமுறைப்படுத்தும் கட்டளைகள் சமூகத்தினைப் பாதிப்பதாகவோ, சுற்றுச்சூழலினைப் பாதிப்பதாகவோ இருந்தால் பிரதேசத்திலுள்ள சிவில் சமூகம் அக்கறைகாட்டுவதனை அவதானிக்க முடிகின்றது. நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் காரணமாக குறித்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மன்னார் மாவட்ட சிவில் சமூகம் எவ்வறு கையாளப்போகின்றது என்பதனை ஏனைய பிரதேச மக்களும் அவதானிப்புடன் உள்ளனர்.

Common / Eurasian crane (Grus grus) flock flying close to wind turbine, Near Diepholz, Lower Saxony, Germany, October 2009

குறித்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் சமூக அக்கறை கவனத்தில் கொள்ளப்பட்டதா?

1.திட்டத்தின் மூலம் எவ்வாறு குறித்த கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையினை பாதிக்காது நடாத்துதல்.
2.வயல் நிலங்கள் மற்றும் அண்மையில் உள்ள வீடுகளுக்கானதிட்டத்தின் காப்பீடுகள் அல்லது காப்புறுதி.
3.திட்டத்தினால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாற்றங்களை முன்நிறுத்திய சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு தேவையில் ஏதேனும் அனர்த்தம். ஏற்பட்டால் அதற்கான தீர்வுகள் மற்றும் நிதிசார் விடயங்கள்.
4.தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நிரந்தரத்தன்மை மற்றும் பால்நிலை சமத்துவத்தினை உறுதிப்படுத்தலும் மருத்துவ வசதிகள்.
5.அனர்த்தங்களின் போதான முன்னெச்சரிக்கை மற்றும் நிதிசார் விடயங்கள்.

6. காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் அதிக ஆபத்தினை கருத்திற்கொண்டு முக்கிய ஆறு கோரிக்கைகள் இடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு..

6.1. சகல பிள்ளைகளுக்கும் அனைத்து நேரங்களிலும் பாதுகாப்பான சூழலில் தொடர்ந்தேர்ச்சியாக கல்வி கிடைக்க வேண்டும்.

6.2. இடர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றுத்துக்கு இசைவாக்கமடைதலுக்காக திட்டங்களை தயாரிக்கும் போது பிள்ளைகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

6.3. அனைத்து அபிவிருத்தி வேலைகளும் நிலைபேறானவையாக இருக்க வேண்டும்.

6.4. இடர் முன்னெச்சரிக்கை முறைமைகளை விருத்தி செய்யும் செயற்பாட்டில் சிறுவர்கள் பங்கேற்க வேண்டும்.

6.5. இடர் நிலைமைகள் மற்றும் அவசர எதிர்ச்செயலாற்றலின் போது அனைத்து சிறுவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

6.6. அனர்தத்தினால் பாதிக்கப்படுகின்ற அனைத்து குடும்பங்களுக்கும் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து நிதி ஆதரவு கிடைக்க வேண்டும். 

7.தீயனைப்பு மற்றும் அனர்த்தம் தொடர்பான பயிற்சி உடன் தீயணைப்பு பிரிவினை பிரதேச சபையில் நிறுவுதல்.

8. பிரதேச மக்களின் மின் கட்டணத்தினை 100% நுற்றுக்கு 60% வீதமாக குறைத்தல்.
9.ஏனையவை… இவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளன.

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)

இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? 24.08.2023 நடந்தது என்ன? (PHOTOS, VIDEOS)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமும் காற்றாலை திட்டமும்!! (கட்டுரை)

மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.