ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!!
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில ரயில் ஊழியர்கள் இன்று (11) முன்னெடுத்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ரயில் எஞ்சின் சாரதிகள் நாளை (12) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சேர்ப்பு நடைமுறையில் திருத்தங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.