செப்டம்பர் முதல் 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள்!!
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, செப்டம்பர் முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட 900 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்துள்ள போதிலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதன் தலைவர் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன எச்சரித்துள்ளார். .
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த டொக்டர் ஆரியரத்ன, செப்டெம்பர் மாதத்தில் பதிவான புதிய நோயாளர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதமானவர்கள், மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.