பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு !!
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த குண்டு வெடிப்பில் ஒரு பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.