சுவிட்சர்லாந்து தேர்தல்: களமிறங்கும் யாழ்ப்பாண இளைஞன் !!
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞரே போட்டியிடவுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாத் 22 ஆம் தகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இவர் பசுமை கட்சி சார்பாக ஆர்காவ் மாநிலத்தில் களமிறங்குகிறார்.
சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் களமிறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.