நல்லூர் கந்தன் ஆலயச் சூழலில் சுற்றாடல் முன்னோடி மாணவரின் முன்மாதிரியான செயற்பாடு.!! (PHOTOS)
மத்திய சுற்றாடல் அதிகார சபையும், கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப் படுத்திவருகிறது.
இந் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட மாணவர்கள் பல்வேறு சுற்றாடல் சார் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு தமது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, பிறரையும் சுற்றாடலின் மீது கருணைகொள்ள வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
இதன் ஓர் அங்கமாக நல்லூர் கந்தன் மகோற்சவகாலத்தில் கடந்த சில நாட்களாக பொலித்தீன் பை பயன்படுத்துபவர்ளை துணிப்பைக்கு மாறுவதற்கான வழிகாட்டல்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் அவர்களிற்கு இலவசமாக துணிப்பை வழங்கிவருவதையும் அவதானிக்கமுடிந்தது.
நேற்று (11.09.2023) அச்சுவேலி மத்திய கல்லூரியை சேர்ந்த சுற்றாடல் முன்னோடி சிறார்கள் நல்லூர் சூழலில் உற்சாகத்துடன் சுற்றாடல் விழிப்புணர்வில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர் எதிர்காலத்தில் சூழல் நேயப்பிரஜைகளாக மாற்றங்காணுவர் என பலரும் கூறுவதை கேட்கவும் முடிந்த்து.
” சூழலை நாம் காத்தால் சூழல் எம்மைக் காக்கும்” எனும் கோசத்துடன் சேவையில் ஈடுபடும் சுற்றாடல் முன்னோடிகளின் செயற்பாட்டற்கு சகலரும் உறுதுணையாக இருப்போம்.