அரச புலனாய்வுத் தலைவர் முறைப்பாட்டினால் சேனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை!!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சேனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலாய் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
செப்டம்பர் 5 ஆம் திகதி இரவு 11.05 மணிக்கு சர்ச்சைக்குரிய வீடியோவை சேனல் 4 வெளியிட்டது, அதில் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலையும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
இதற்கு முன்னர் ஆதாரங்களுடன் முறையான பதில்களை வழங்கியிருந்த போதிலும், தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சேனல் 04 இந்த காணொளியை வேண்டுமென்றே ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்திற்கு சுரேஷ் சாலை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலையின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்தார். இந்த திட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சேனல் 4 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கிறது – பாதுகாப்பு அமைச்சகம்!!
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!