14- 24 ஆம் திகதிகளில் மதிப்பீடு நடைபெறும் !!
சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தின் மதிப்பீடானது செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 24 ஆம் வரை நடைபெறுமென இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (11) யட்டியந்தோட்டையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடன் திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விசாரிக்க IMF இன் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வார்கள், அத்துடன் பல சுற்று கலந்துரையாடல்களும் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.
”கடன் திட்டத்தை வெற்றிகரமாக நடாத்த நான் பாரியளவிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன், எனவே சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக எதிர்கொள்ள என்னால் முடியும். இறுதி கலந்துரையாடல் பெரும்பாலும் ஜனாதிபதியுடன் நடைபெறும். அது வெற்றிகரமாக முடிந்த பின் கடன்திட்டத்தின் இரண்டாம் பகுதி நிதி கிடைக்கபடபெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.