;
Athirady Tamil News

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!!

0

பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.