கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான தகவல்: விலைகளில் மாற்றம் !!
கனடாவில் வீட்டு வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய வீட்டில் வாடகைக்கு இருப்போர் மாதம் ஒன்றுக்கு 2117 டொலர்களை வாடகையாக செலுத்த நேரிட்டுள்ளது.
வாடகை தொகை
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் சராசரி வாடகை தொகையானது சுமார் 9.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் சராசரியாக வீட்டு வாடகை தொகையானது சுமார் நூறு டொலர்களினால் மாதாந்தம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் அநேக பகுதிகளில் வாடகை தொகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.