பீகாரில் பள்ளிக் குழந்தைகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 குழந்தைகளின் கதி என்ன?
பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் பாக்மதி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுபுர் பாத்தி காட் இடையே, 30 குழந்தைகளை படகு ஒன்று பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் குழந்தைகள் தண்ணீர் தத்தளித்தனர். உடனடியாக மீட்புப்பணி நடைபெற்றது. இதன் பயனாக 20 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால், 10 குழந்தைகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தகவல் அறிந்ததும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ”மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அரசு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.