திருப்பதியில் டபுள் டக்கர் ஏ.சி. பஸ் அறிமுகம்!!
திருப்பதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ 2 கோடி மதிப்பில் 2 அடுக்குகள் கொண்ட மின்சார ஏ.சி. வாங்கப்பட்டு உள்ளது. மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும், பொதுமக்களுக்கு அதிக சத்தம் ஏற்படுத்தி இடையூறு வராத வகையில் இந்த பஸ் வாங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிர்வகிப்பது மற்றும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. டபுள் டக்கர் பஸ்சை இயக்க மின் கம்பிகள் தொடாதவாறு அகலமான சாலைகள் இருக்க வேண்டும். ஆனால் திருப்பதியில் டபுள் டக்கர் பஸ் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என கூறப்படுகிறது.
சீனிவாச சேது பாலம் மாஸ்டர் பிளான் சாலைகளில் மட்டுமே இந்த பஸ் இயக்க முடியும். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி காளஹஸ்தி இடையே செல்லும் டவுன் பஸ்களை திருப்பதி நகருக்குள் திருப்பிவிட பல்வேறு முயற்சிகள் நடந்தது ஆனால் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. திருப்பதி நகர பகுதிக்குள் சாதாரண பஸ்களையே இயக்க முடியாத நிலையில் டபுள் டக்கர் பஸ் எப்படி இயக்க முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் டபுள் டக்கர் பஸ்ஸை ஆந்திரா போக்குவரத்து கழகத்திடம் 2,3 நாட்களில் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.