அடுத்த வருடம் முதல் எரிபொருள் நிலையங்களில் தானியங்கி எரிபொருள் பம்பிகள்!!
நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எரிபொருள் பம்பிகள் மற்றும் பணம் அறவீட்டு உபகரணத்தை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தானியங்கி பம்பிகள் மற்றும் உபகரணம் பொருத்தப்பட்ட பின்னர், எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரும் நுகர்வோர், தமக்குத் தேவையான எரிபொருளை தாமே பெற்றுக் கொண்டு உரிய உபகரணத்தில் பணத்தை வழங்க முடியும்.
இதன் மூலம் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு விரைவாக எரிபொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்ளவும் அதற்கான தொகையை அறவிட்டுக் கொள்ளவும் வசதி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை,அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலைகள் தன்னியக்கமாக தினந்தோறும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.