;
Athirady Tamil News

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வௌியீடு!!

0

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறப்பட்டுள்ளதாவது:- களிமண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகள் தயாரிக்க அல்ல பந்தல்களை அலங்கரிக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.