பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் மகளிர் உரிமை தொகை திட்டம்- விஜய் வசந்த் எம்.பி.!!
பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், யாரையும் சார்ந்து வாழ தேவையில்லை என தமிழக பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ் நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் பெயரே மிக சிறப்பானது. இது மகளிர் உதவி தொகை அல்ல. இது அவர்களின் உரிமை தொகை. தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 கோடியே 6 லட்சம் பெண்கள் இதனால் பயனடைய போகிறார்கள் என்பது கணக்கு. 1 கோடி 6 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்பதே உண்மை. பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சம உரிமை ஆகியவற்றில் தமிழ் நாடு என்றுமே எடுத்து காட்டாக விளங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் உரிமைகளும் வழங்கி உள்ளது. இந்த தொகை மகளிர் கையில் இருந்தால் பெண்கள் தங்கள் தேவைகளுக்கு கணவனையோ பிள்ளைகளையோ நாட தேவையில்லை. தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்து அதை இன்று நிறைவேற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மக்கள் சார்பாக நன்றி. சட்டமன்ற தேர்தலுடன் நானும் தேர்தலை சந்தித்தேன். ஆதலால் இந்த வாக்குறுதி எனக்கும் பொருந்தும். இந்த உரிமை தொகை வாயிலாக பயன் பெறும் அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் செழிக்க வாழ்த்துவதாக விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.