அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி பரிசோதனை- டாக்டர்கள் சாதனை!!
அமெரிக்காவில் 1 லட் சத்து 3ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருக்கின்றனர். இதில் 88 ஆயிரம் பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது. இதையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை தொடர்பாக அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தானமாக வழங்கப்பட்ட உடல்கள் மற்றும் விலங்குகள் மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில மனித செல்கள் பன்றிகளின் மூளைகளில் காணப்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உயிருடன் இருக்கும் நோயாளிக்கு உலகில் முதல்முதலாக பன்றியில் இருந்து இதயம் சம்பந்தமான மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்த போதிலும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார்.
இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து அமெரிக்க நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து 61 நாட்கள் நடந்த பரிசோதனையின் மூலம் இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.