சீன சுற்றுலாதாரிகளுக்கு விசா தேவையில்லை : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு !!
தமது நாட்டிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லையென தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாய்லாந்திற்கு அருகில் உள்ள சீனாவிலிருந்து பெருமளவானோர் ஆண்டுதோறும் சுற்றுலாவிற்கு செல்கின்றனர்.
ஒரு கோடி சீன சுற்றுலா பயணிகள்
இதனால் தாய்லாந்து, சுற்றுலாதாரிகள் மூலம் பெருமளவில் வருமானத்தை ஈட்டி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் ஒரு கோடி சீன சுற்றுலா பயணிகள் தாய்லாந்து சென்றுள்ளனர்.
எனினும் கொரோனா தொற்றுக்கு பின்னர் சீன சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவில் குறைந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பயுள்ளதால் சீன சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தவருடம் 29 ஆம் திகதி வரை விசா தேவையில்லை என தாய்லாந்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை கஜகஸ்தான் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தாய்லாந்து சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.