பாடசாலை பேருந்து சாரதிக்கு அடித்த அதிஷ்டம்: வேலையையும் துறந்தார் !!
பாடசாலையில் பேருந்து சாரதியாக பணிபுரிபவருக்கு 1,00,000 அமெரிக்க டொலர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்ததால் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதுடன் வேலையையும் உதறி தள்ளிவிட்டார்.
அமெரிக்காவின் கெண்டுக்கி நகரில் உள்ள ஜெஃபர்ஸன் கவுண்டி பொதுப் பாடசாலையில் பத்து வருடங்களுக்கும் மேலாக சாரதியாக பணியாற்றும் ஜேம்ஸ் கீயோன் என்பவருக்கே இந்த பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
இந்த பணத்தை வைத்துக் கொண்டு தனது ஓய்வு காலத்தை சந்தோஷமாகவும் குதூகலமாகவும் கழிக்க திட்டம் தீட்டியுள்ளார்.
“என்னால் இதை நம்பவே முடியவில்லை. ஒருமுறைக்கு நான்கு முறை அந்த எண்களை சரி பார்த்தேன். அந்த எண்கள் மாறாமல் அப்படியே இருந்தன. ஆஹா, நமக்கு ஜக்பாட் அடித்துவிட்டது என்பதை அதன்பிறகே உணர்ந்தேன்.
முதலில் 50,000 அமெரிக்க டொலர் பரிசு விழுந்தது. நாம்தான் எப்போதுமே பலமுறை விளையாடுவோமே என யோசித்துக் கொண்டிருந்த போதுதான், எனக்கு கிடைத்த பரிசுத் தொகை பவர்பிளே காரணமாக இரண்டு மடங்கானது” என சந்தோஷமாக தெரிவித்தார் ஜேம்ஸ்.
பரிசு கிடைத்த அடுத்த நிமிடமே, இனி நான் வேலைக்கு வர மாட்டேன் என தன்னுடைய முதலாளியிடம் கூறிவிட்டார் .