உலகின் வெப்பமான ஆண்டாக 2023 : நாசா விடுத்துள்ள எச்சரிக்கை !!
பூமி வெப்பமயமாதல் தொடர்பில் நாசாவின் கோடார்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் ஸ்டடீஸ் விஞ்ஞானிகள் முக்கியமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.
அவ்வகையில்,1880 ஆம் ஆண்டில் உலகளாவிய பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2023 ஆம் ஆண்டே பூமியின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாய்வின் அடிப்படையில்,
“ஜூன், ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களின் வெப்பநிலையானது 0.41 டிகிரி ஃபாரன்ஹீட் (0.23 டிகிரி செல்சியஸ்) ஆக காணப்பட்டது.
இதனால் உலகின் பல பாகங்களில் வெப்ப அலைகள் வீச ஆரம்பித்துள்ளன.
அத்துடன், கனடா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் பயங்கர காட்டுத்தீயை அதிகரித்ததோடு, தென் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன.
அதே நேரம் இத்தாலி, கிரீஸ் போன்ற பகுதிகளில் கடுமையான மழைக்கு வழிவகுத்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.