பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை!!
நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.