சீன பாதுகாப்பு அமைச்சர் பொது வெளியில் காணவில்லை: வெடித்தது புதிய சர்ச்சை !!
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்பு இரண்டு வாரங்களாக பொது வெளியில் தோன்றாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓகஸ்ட் 29 அன்று ஆபிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு சபை கூட்டத்தில் அவர் கடைசியாக பொது வெளியில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷங்பு கடந்த 3 வாரங்களாக பொது வெளியில் காணப்படவில்லை. இதனால், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜப்பானுக்கான அமெரிக்க தூதர், “சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்புவை 3 வாரங்களாக பார்க்க முடியவில்லை, ஏற்கனவே திட்டமிட்டபடி வியட்நாம் நாட்டிற்கும் செல்லவில்லை, சிங்கப்பூர் கடற்படை தலைவருடன் திட்டமிட்டபடி சந்திக்கவும் இல்லை. இதற்கு காரணம் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதே காரணமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜி ஜின்பிங்கின் அரசில் அமைச்சர் ஒருவர் காணாமல் போனது இது முதல் முறையல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த ஜூலை மாதம் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் காணாமல் போன செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.
சிறிது காலங்களின் பின்னர் புதிய வெளியுறவு அமைச்சரை சீன அரசு நியமித்தமை குறிப்பிடத்தக்கது.