;
Athirady Tamil News

லிபியாவில் மரண ஓலம் : குவியல் குவியலாக புதைக்கப்படும் சடலங்கள் : கதறி அழ கூட ஆளில்லாத துயரம்!!

0

லிபியாவின் கிழக்கு பகுதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய டேனியல் புயலால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டேனியல் புயல் அதனால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக அங்குள்ள இரண்டு அணைகள் இடிந்து விழுந்தன. இதனால் அணையில் இருந்த தண்ணீர் டெர்னா நகரை மூழ்கடித்தது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் உறக்கத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்துடன் அடித்து செல்லப்பட்டனர்.

கட்டங்கள் வீழ்ந்தன பல அடி உயரத்துக்கு வெள்ள நீர் ஆறுபோல் ஊருக்குள் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் டெர்னா நகரமே சின்னபின்னமாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் சடலங்கள் சிதறி காணப்படுகின்றன.துறைமுக நகரில் மட்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என டெர்னா மேயர் அப்துல்மோனெம் அல்-கைதி அச்சம் தெரிவித்துள்ளார். இருப்பினும் மீட்புப்பணியில் இணைந்து ஈடுபட்டுள்ள ரெட் கிரசென்ட் அமைப்பு 11 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட உடல்கள் கனரக வாகனங்களின் உதவியோடு குவியல் குவியலாக புதைக்கப்படுகின்றன. குடும்பம் குடும்பமாக மக்கள் உயிரிழந்துள்ளனர்.10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.

அந்நாட்டு அரசு தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பலத்த மழையால் அணை நிரம்பி வழிந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அதேசமயம் இந்த கோர சம்பவம் இயற்கை பேரிடரா அல்லது மனித தவறால் நிகழ்ந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே அதிகாரிகள் மழை மற்றும் புயல் குறித்து முன்கூட்டியே எச்சரித்து மக்களை வெளியேற்றியிருந்தால் இத்தனை உயிரிழப்புகளை தவித்திருக்கலாம் என ஐநாவின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பேரழிவை தொடர்ந்து அசுத்தமான நீரால் தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளதாகவும் ஐநா எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.