;
Athirady Tamil News

வக்கீல் மனைவியை விவாகரத்து செய்த கூகுள் இணை நிறுவனர் – காரணம் தெரியுமா?!!

0

1998ல் அமெரிக்காவில், கணினி மென்பொருள் பொறியியல் வல்லுனர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகிய இருவர் கூட்டாக உருவாக்கிய சமூக வலைதள நிறுவனம், கூகுள். 2015ல் செர்ஜி ப்ரின், நிகோல் ஷானஹான் எனும் கலிபோர்னியா மாநில பெண் வழக்கறிஞரை காதலித்து வந்தார். அந்த வருடமே தனது அப்போதைய மனைவியான ஆன் வோஜ்சிக்கியை விவாகரத்து செய்தார் செர்ஜி ப்ரின். 2018ல் நிகோலை செர்ஜி ப்ரின் திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2021ல் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர்.

உலகின் நம்பர் ஒன் கோட்டீஸ்வரரும், அமெரிக்காவின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் (முந்தைய டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், செர்ஜி ப்ரின் ஆகிய இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நண்பரான எலான் மஸ்க், மனைவி நிகோல் ஷானஹான் ஆகிய இருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும் அதனால் செர்ஜி ப்ரின் விவாகரத்து கோரியிருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதனை நிகோல் மற்றும் எலான் மஸ்க் இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர். இந்நிலையில், 2022 ஜனவரியில் “தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள்” ஏற்பட்டதன் காரணமாக மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி செர்ஜி ப்ரின் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

கடந்த மே மாதம் இருவருக்குமான விவாகம் நீதிமன்றம் மூலமாக ரத்தானது. விவாகரத்திற்கு எதிராக நிகோல் முறையிடவில்லை. மணத்துணை பாதுகாப்பு தொகையை மட்டுமே நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். பிற சொத்துக்களின் பிரிவினையையும், தங்களது 4-வயது ஒரே மகளின் நிலை குறித்தும் இரு தரப்பு வழக்கறிஞர்களின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்து கொண்டனர். உலகின் நம்பர் 9. பணக்காரர் எனும் இடத்தை சுமார் ரூ.1000 கோடி ($118 பில்லியன்) சொத்து மதிப்புடன் செர்ஜி ப்ரின் தக்க வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.