;
Athirady Tamil News

இனி வாட்ஸ்அப் பண்ணுங்க போதும்.. புதிய சேனல் ஆரம்பித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்!!

0

பொது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், “முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்” (Cheif Minister Office, Uttar Pradesh) என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம், பொது மக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் குறைகளை முதலமைச்சர் அலுவலகத்தில் முறையிடலாம். இதற்கான அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில், “முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-க்கு உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 கோடி பேரும் ‘ஒரே குடும்பம்’. முதலமைச்சரின் தலைமையில், உத்தர பிரதேச அரசங்கம் ‘குடும்பத்தின்’ ஒவ்வொருத்தர் நலம் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது.” “உத்தர பிரதேச குடும்பத்தின் ஒவ்வொருத்தாருடன் எளிதில் தகவல் பரிமாற்றம் செய்யவும், தகவல் பரிமாற்றம்தான் ஜனநாயகத்தின் ஆத்மா என்று நினைக்கும் முதலமைச்சர் சார்பில் மாநில அரசு அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல்- ‘Cheif Minister Office, Uttar Pradesh’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுநலன் மற்றும் அரசு துறை திட்டங்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு எளிதில் கொண்டுசேர்க்க முடியும். இந்த சேனலில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.