சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை!
நவீன சிங்கப்பூரின் நிறுவனர் என்று பரவலாகப் போற்றப்படும் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். “லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளின் சிறப்பு சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது மரியாதைகள்” என்று எக்ஸ்-ல் பிரதமர் மோடி கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் குறிப்பிடுகையில்,” சிங்கப்பூர் மாற்றத்தில் அவரது தொலைநோக்கு தலைமை முக்கியப் பங்காற்றியது. அவரது தொலைநோக்கு பார்வையும், இடைவிடாத நாட்டமும் அவரது தனிப்பட்ட மகத்துவத்திற்குச் சான்றாகும். அவரது பணி உலகம் முழுவதும் உள்ள தலைவர்களை ஊக்குவிக்கிறது,” என்று அவர் கூறினார்.