நினைத்த நேரத்தில் வேலை – அரச ஊழியர்களுக்கு அடித்த வாய்ப்பு !!
குவைத்தில் அரச ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தாம் நினைத்த நேரத்தில் வேலையை தெரிவு செய்யலாம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்காக காலையிலும், மாலையிலும் குறிப்பிட்ட நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 முதல் 9 மணிக்குள் எந்த ஒரு நேரத்திலும் அலுவலக வேலையை ஊழியர்கள் தொடங்கலாம். அதேபோன்று பிற்பகல் 1.30 முதல் 3.30 மணிக்குள் எந்த ஒரு நேரத்திலும் வேலையை செய்யலாம்.
நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதிலும் 30 நிமிடங்கள் கிரேஸ் பீரியட் வழங்கப்படுகிறது.அதாவது, இந்த நேரத்தை வேலை தவிர்த்து பிற விஷயங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுதொடர்பான வழிகாட்டுதல்களை குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
அண்மையில் இதற்கான அனுமதியை குவைத் சிவில் சேவை கவுன்சில் வழங்கிய நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.