உலகில் இதுவரை மழையே பெய்யாத கிராமம் : ஆச்சரியம் ஆனால் உண்மை !!
மழையின்றி மக்கள் படும் அவஸ்தை ஏராளம். குடிநீருக்கு, விவசாயத்திற்கு, கால்நடைகளுக்கு மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்கு மழை என்பது முக்கியமான ஒன்று.
ஒருநாள் மழை பெய்தவுடன் நாம் படும் அவஸ்தை வேறு. ஆனால் மழையே பெய்யாத கிராமம் உலகில் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம் அப்படி ஒரு இடம் உள்ளது.
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் தான் அல்-ஹுதீப் என்ற கிராமம் மழையே இல்லாமல் உள்ளது. இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. மற்ற இடங்களை விட்டு உயரமாக இருந்தாலும் இந்த இடம் வறட்சியுடன் தான் காணப்படுகிறது.
இந்த கிராமத்தில் எப்போதும் மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படும். பகலில் அதிகப்படியான வெப்பமும் இரவில், உறைபனி குளிரும் இறங்குகிறது.மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.
இந்த கிராமத்தில் ஏன் மழை பெய்வதில்லை என்ற கேள்வி எழும். அதற்கு காரணம், எமனின் இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது தான் காரணம்.
மேகங்கள் இல்லாவிட்டால்
அல் ஹுதைப் கிராமத்தின் இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ளது. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீட்டருக்குள் குவியும். எனவே அல்-ஹுதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை. மேலும் மேகங்கள் இல்லாவிட்டால் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதனால் தான் இங்கு மழையே பெய்வதில்லை.