பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு எமன் காத்து இருக்கிறார்- யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!!
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவியின் துப்பட்டாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார். அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அங்கு நடந்த 343 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது: சட்டத்தை சீர்குலைக்க யாரும் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். பெண்களை துன்புறுத்துவது போன்ற பாலியல் குற்றத்தை யாராவது செய்தால் அவர்களுக்காக மரண தெய்வமான எமராஜ் காத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.